சமூக விலகலை மறந்துட்டீங்களே! – கரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஊரடங்கை மீறி பேரணி நடத்திய பாஜக MLA

ஊரடங்கை மீறி பாஜக MLA இதுபோன்று பேரணி நடத்தியது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது,

Advertisement

பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை பாயுமா..?

கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக தன்னலம் பாராமல் சேவை செய்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணியை நடத்தியதாக பாஜக MLA கூறியுள்ளார்,

கரோனா வைரஸ் தொற்று, நாடு முழுவதும் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அப்படி வெளியே வந்தாலும் மாஸ்க் அணியவேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஷ்ரவஸ்தி ராம் பாண்டே ஊரடங்கை மீறி பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக தன்னலம் பாராமல் சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பலருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த பேரணி நடத்தப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ இதுபோன்று செய்ததால், அந்த பகுதி மக்களும் அந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடக்கூடாது, சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்திவரும் நிலையில், அரசியல்வாதிகள் இதுபோன்று விதிமீறலில் ஈடுபடுவது விமர்சனத்திற்குள்ளாகிவருகிறது

Show More
Back to top button