கோவையில் பள்ளி மாணவி கர்ப்பம்..! மிரட்டி சீரழித்த 10 பேர் கைது… என்ன நடந்தது?

Advertisement

கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது மதிப்புள்ள பள்ளி மாணவி சில நாட்களாக வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை கடந்த 11ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமியும் அவரது பெற்றோரும் மருத்துவமனையில் இருந்து திடீர் மாயம் ஆகினர். கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் இருந்து மாயமானதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியை கண்டுபிடித்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காதலிப்பதாக கூறி நட்புடன் பழகி 17 வயது சிறுவர்கள் உள்பட10 பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் மாணவி கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கோவையைச் சேர்ந்த கார்த்திக் (23), தனசேகர் (24), சந்தோஷ் (19) மற்றும் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிறுவர்கள் நான்கு பேர் சீர்திருத்த பள்ளியிலும் மீதமுள்ளவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட உள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Show More
Back to top button