9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கேரளாவின் பாஜக தலைவர், சிறுமி வீட்டாருக்கும் கொலை மிரட்டல்.!

0
17

கேரள கண்ணூர் மாவட்டம், திருப்பங்கோட்டூர் பஞ்சாயத்து தலைவரான பத்மராஜன், ஆசிரியரும் அந்த ஊரின் பாஜக தலைவரும் ஆவார்..!

இவர் மீது புகார் அளித்துள்ள சிறுமியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இந்த சிறுமி போல பல சிறுமிகளையும் அவர் பலாத்காரம் செய்துள்ளதும், இவரை குறித்து பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் புகாரளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும். இவர் குறிப்பிட்ட அந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததை தாமே பலமுறை கண்டுள்ளதாகவும் பத்மராஜனின் தோழர் சாட்சி கூறியுள்ளார்..!

என்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக ஞாயிற்று கிழமைகளில் சிறுமிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து பத்மராஜன் இதுபோல காமச்சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்..! சம்பவம் நடந்த அன்று குறிப்பிட்ட சிறுமி கழிவறையில் இருந்து அழுதுகொண்டே வந்து சக தோழிகளிடம் கூறிய நிலையில் அவர்களும் தங்களை அவர் இது போல செய்து துன்புறுத்தியதாக கூறியுள்ளனர்..!

இதுபற்றி வெளியில் கூறினால் உன்னையும் உன் அம்மாவையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளதாக மகளிர் நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜூபினா இர்ஷாத் தெரிவித்துள்ளார்..!

இது குறித்த விபரம் அறிந்த சைல்டு லைன் டீம் , மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் வாங்கிய கையோடு பனூர் போலிசாரால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது..!

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மட்டண்ணூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறுமி தெளிவான வாக்குமூலம் அளித்திருந்தும், வழக்கு பதிவு செய்து 25 நாட்களுக்கு மேலாகியும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவரை கைது செய்யப்படவில்லை மாறாக 9 வயது சிறுமியை மீண்டும், மீண்டும் விசாரிப்பது மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை நாசம் செய்த பாஜக தலைவரை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பதாக பிரபல சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முதலமைச்சர் மற்றும் சுகாதார மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கே.கோலைஜா ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்..!