கொரோனா வைரஸ் பரிசோதனை ஏழைகளுக்கு மட்டுமே இலவசம் – உச்ச நீதிமன்றம்


டெல்லி: கொரோனா வைரஸிற்கான இலவச சோதனை ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது..! இந்த நன்மை வேறு யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கலாம் என்று விட்டுவிட்டது..!


COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான இலவச சோதனைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது..! ஆனால், தனியார் ஆய்வகங்கள் அனைவருக்கும் இலவசமாக செய்ய முடியாது என்று கூறியதையடுத்து தனது முடிவை உச்ச நீதிமன்றம் மாற்றிக்கொண்டது..!


Free Coronavirus Testing Only For Poor, Says Supreme Court

Advertisement


இன்று உசச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில்,” கொரோனா வைரஸ் தொற்றுக்கான இலவச சோதனை “ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தியுள்ளபடி கிடைக்கும்,. மேலும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான எந்தவொரு பிரிவினருக்கும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டபடி கிடைக்கும்.அமைப்புசாரா துறைகளில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற பலவீனமான பிரிவுகளின் வேறு எந்த வகைகயானவர்கள் தகுதிபெற வேண்டுமா என்பதை மத்திய அரசும் சுகாதார அமைச்சமும் தீர்மானிக்க முடியும்” என்று கூறியுள்ளது..!

அத்துடன் மத்திய அரசு கொரோனா வைரஸ் பரிசோனை யார் யாருக்கு இலவசம் என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவை எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்..!

Show More
Back to top button