சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாமோதரனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாமோதரனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

Advertisement

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைத்துக்கு சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாமோதரன் சென்றுள்ளார்.அங்கு ஊழியர் ஒருவர் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை கொடுத்து வந்ததை கண்டு மருந்து வழங்கிய காட்சியினை வீடியோ பதிவு செய்த சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாமோதரன் மீது மருத்துவர்கள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைக்க பட்ட இத்தகை செயல் செய்தியார்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை ஒடுக்க நினைக்கும் செயலாகும் .

மேலும் அங்குள்ள மருத்துவருக்கும் சன் தொலைக்காட்சி தாமோதரனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது இந்த வாக்கு வாதத்தில் ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள் பழி வாங்கும் நோக்கத்திலும் அல்லது தாமோதரனால் மருத்துவரின் பணிக்கு துறை ரீதியான பிரச்சனை வந்து விடுமோ என்கிற அச்சத்திலும் மருத்துவ பணியை தர்க்காத்து கொள்ள மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுக்க பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது ?

பொது மக்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்தியை சேகரித்த ஒளிப்பதியாளர் தாமோதரன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தார் என்றும் போலியான பத்திரிக்கையாளர் என்றும் பொய்யான புகாரை கொடுத்து கைது செய்து சிறையில் அடைக்க பட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .

கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோய் பரவு வதை தடுக்கும் வகையில் சுகாதார துறையில் அர்பணிப்புடன் பலரும் மிக சிறப்பாக பணியாற்றி வரும் இந்த நிலையில் தங்களின் கடமைகளை சரிவர செய்யாத சிலர்களால் இது போன்ற பிச்சனைகள் ஏற்படுகிறது . இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்கபடுவதும் கைது செய்ய படுவது தொடர்ந்து நடை பெறும் வண்ணமாக உள்ளது. இதனை ஒழுங்கு படுத்த வேண்டுமாயின் பத்திரிக்கையாளர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது

எனவே : சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாமோதனை எந்த வித நிபந்தனை இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மெனவும் தாமோதரன் மீது போட பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Show More
Back to top button