அமேரிக்கா மிரட்டலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அமெரிக்கா மிரட்டலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு 3.3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரிக்கும் என தெரிகிறது. கொரோனா வைரஸ்க்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டிப்பிக்காத நிலையில், இந்தியாவில் மலேரியாவிற்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு நல்ல பலன் அளித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 250 தாண்டியுள்ளது.

இதனால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்பட சில மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய தடை விதித்துள்ள நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து இதுவரை இந்தியா முடிவெடுக்காத நிலையில், இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டண தருணத்தில் அனைவருக்கும் உதவ வேண்டும் என்பது மனித இயல்பு, ஆனால் மிரட்டல் விடுத்த அதனை சாதிக்க நினைக்கும் ஆதிக்க போக்கை ஒரு காலமும் ஏற்க முடியாது. அமெரிக்கா அதிபர் டிர்ம்ப் இந்த மிரட்டல் பேச்சை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை தேவையை விட கூடுதலாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் தற்போது இருப்பதால், அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணிய வேண்டாம். இந்த இக்கட்டண தருணத்தில் பிரதமர் மோடி எடுக்கும் அனைத்துமுடிவுகளுக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Show More
Back to top button