CoronaVirusஇந்தியாஉத்தரபிரதேசம்பாஜக - BJP

பாஜக MLA-வான தாதாராவ் கேச்சே என்பவர், ஞாயிறு அன்று 144 தடை உத்தரவை மீறி தனது பிறந்தநாள் விழாவை 200 பேருடன் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்..!

மஹாராஷ்டிரா மாநிலம் வர்தா தொகுதி

பாஜக எம்.எல்.ஏ-வான தாதாராவ் கேச்சே என்பவர், ஞாயிறு அன்று 144 தடை உத்தரவை மீறி தனது பிற பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்..!

தனது பிறந்தநாளுக்கு மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக கோதுமையும் மளிகைப்பொருட்களும் இலவசகாம வழங்க இருப்பதாக அவர் அறிவிப்பு செய்தார்..! இதனால் ஒரு 200-க்கும் மேற்பட்டோர் அவரது எம்.எல்.ஏ. பங்களாவிற்கு வெளியே கூடிவிட்டனர்..!

அவர்களில் வெறும் 21 பேருக்கு மட்டுமே பரிசுப்பொருட்களை வழங்கிய அவர் மற்றவர்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு..!

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எம்.எல்.ஏ. தாதாராவ் கேச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்றும், 144 தடையை மீறியதற்காக அவர் மீது தொற்று நோய் பரவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்..!


டெல்லி மாநாட்டில் கூட்டம் கூடியதாக பேசியவர்கள், அதனால் தான் கொரோனா பரவியது என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பாஜகவினர் அடுத்தடுத்து நடத்தும் கூட்டங்களை கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்..!

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலம் மஹாராஷ்டிரா. அங்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் இச்செயலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

Related Articles

Back to top button