கொரோனா தொடர்பாக முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கொரோனா தொடர்பாக முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசையும் முஸ்லிம்களையும் தொடர்பு படுத்தி வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் என்பவர் மீது 4 பிரிவுகளில் மேலப்பாளையம் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளனர்..!

சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினரிடையே பிரிவை ஏற்படுத்தும் விதமாக வதந்தி பரப்பியதாக ஏப்ரல் 2 ஆம் தேதி பேசியதாக புகார் எழுந்துள்ளது..!

இதையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் கொடுத்த புகாரின் பேரில் மாரிதாஸ் மீது ஜாமீனில் வெளியே வராதபடி 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!

Advertisement

இந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505 (2), 67பி என்ற நான்கு இந்திய சட்டப் பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அமைச்சர் வேலுமணி அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி (ஏப்ரல் 2 கோவை)

கொரோனா பரவியதற்கு ஒரு குறிப்பிட்ட மதம்தான் காரணம் என வதந்தி பரப்பப்படுகிறதே என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்களிடம் கோவையில் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது..!


அதற்கு, அமைச்சர் வேலுமணி அவர்கள் கூறுகையில் “சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை. வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதை போன்றது.
சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார் அமைச்சர் வேலுமணி

Show More
Back to top button