தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன – கனிமொழி எம்பி
இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற திருமதி. கனிமொழி எம்.பி அவர்களிடம் மருத்துவமனை டீன் டாக்டர் திருவாசகமணி அவர்கள் கொரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டில் சில உள்கட்டமைப்பு மற்றும் எலிவேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.
Advertisement

உடனடியாக ரூபாய். ஐம்பது லட்சத்தை இந்த பணிகளுக்கு ஒதுக்கித் தருவதாக கூறியதுடன் மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் இந்த சிறப்பு நிதியை அளிப்பதாக கடிதமளித்தார்.
திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.