தமிழ்நாடு

கோவில்பட்டியில் ஊருக்குள் புகுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கோவில்பட்டியில் ஊருக்குள் புகுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகர் அருகேயுள்ள காலியிடத்தில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில், தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பெண் புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், வனவர் நாகராஜிடம் தீயணைப்புப் படையினர் புள்ளிமானை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வனவர் நாகராஜ் கூறுகையில், தற்போது நிலவும் வெயிலின் தாக்கத்தினால் புள்ளிமான் ஊருக்குள் வந்திருக்கிறது. சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பின்பு குருமலை காப்புக்காட்டில் கொண்டுவிடப்படும் என்றார

Related Articles

Back to top button