கார்ப்ரேட் நிறுவனங்கள் கள்ள மவுனம் கடைப்பிடிக்க கூடாது : மத்திய அரசு 5 ஆயிரம் வழங்க வேண்டும்!
நாகையில் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி

கார்ப்ரேட் நிறுவனங்கள் கள்ள மவுனம் கடைப்பிடிக்க கூடாது.!

மத்திய அரசு 5 ஆயிரம் வழங்க வேண்டும்!

நாகையில் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி.!

மார்ச்-30.,

இன்று நாகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது..

தமிழக அரசு கொரோனா தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

இவ்விஷயத்தில் பிரதமர், முதல்வர் உட்பட பலரின் அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு நம் அனைவரின் நலனுக்கானது.

பல மாநில அரசுகள் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை அறிவித்துள்ளன. அவை மட்டுமே போதாது.

ஊரடங்கு உத்தரவால் அனைத்து மக்களும் வருவாய் இழந்துள்ளனர். தொழிலாளிகள், விவசாய கூலிகள், மீனவர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள், சாலையோர சிறு வியாபாரிகள், சுமை தூக்கிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என பலரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்.

GST மூலம் அதிக நிதியை மத்திய அரசு சேகரித்து வைத்துள்ளது. பல மாநில வரி வருவாய் அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாடு முழுக்க உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு தலா 5 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும்.

அதுபோல் கார்ப்ரேட் நிறுவனங்கள் இத்தருணத்தில் கள்ள மவுனத்தை காட்டுவது கண்டிக்கத்தக்கது.

டாட்டா நிறுவனம் 1500 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை அண்டிப் பிழைத்த அதானி நிறுவனம் வெறும் 100 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. இதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

மக்களை சுரண்டிய கார்ப்ரேட் நிறுவனங்கள், நாடும், மக்களும் சிரமப்படும் போது பிரதமர் நிவாரண நிதிக்கு வாரி வழங்க வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.

பேட்டியின் போது மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் , மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லா, நாகை MLA அலுவலக செயலாளர் சம்பத் மற்றும் முரளி ஆகியோர் உடனிருந்தனர் .

Advertisement

Show More
Back to top button