டெல்லி மாநாட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை
ஊடகங்களில் வெளியான செய்திக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு

டெல்லி மாநாட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை
ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பு தெரிவித்துள்ளனர்

Advertisement

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது அவர்கள் மறுப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்..!

அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பது :-

டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர்
கலந்து கொண்டதாகவும் இதனால் தமிழகத்தில் நோய்தொற்று அதிகரிக்க காரணம் என்று சில ஊடகத்தில் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் யாரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை அதில் துளியளவும் உண்மை இல்லை..!

தமிழக மக்களின் நலனில் ஜாதி மத பேதம் இல்லாமல் பல்வேறு பேரிடர் காலங்களில் ஜமாத் சிறப்பாக பணியாற்றி வருகிறது..! பத்திரிகையாளர்களே அறிவீர்கள்..!

எனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்தான செய்திகளின் உண்மை தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள மாநில ஊடக பொறுப்பாளரும் மாநில துணைத் தலைவருமான. சகோதரர் அப்துல் ரஹ்மான் (9789030302) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்..!

Show More
Back to top button