CoronaVirusதமிழ்நாடு

தேனி : பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட தென்கரை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட தென்கரை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நிர்வாகமும், தீயணைப்புப் பணிகள் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினர் நகர் நல அலுவலர், தினேஷ் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அலெக்சாண்டர் நகரமைப்பு ஆய்வாளர் நிஜந்தன் மற்றும் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வீரர்கள்,தீயணைப்பு வாகனங்களில் கிருமி நாசினி திரவம் நிரப்பப்பட்டு அதன் மூலம் முக்கிய வீதிகளின் வழியாக, வீடுகள், கடைகள், மற்றும், நான்கு சக்கர ,இருக்கர வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்தவிழிப்புணர்வினை சுகாதார அலுவலர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button