லால்பேட்டை : தன் உண்டியலில் சேகரித்து வைத்திருந்த 3018 ரூபாய் சில்லறை காசை கொடுத்து. ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வாங்க பயன்படுத்துங்கள் என கூறிவிட்டு சென்றார் ஆஃபிக்கா

தமிழ்நாடு : உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்..!

Advertisement

இந்த கொரோனாவின் கொடூரா தாக்கத்தினால் உலகம் முழுவதும் கிட்டதட்ட 34,000 பேர் பலியாகியுள்ளனர்..! இதற்கிடையில் இந்தியாவிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும், தனி நபர்களும் தங்களால் முடிந்த நிதியினை அனுப்பியும் வருகின்றனர்..! இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஒருவர் 501 ரூபாய் அனுப்பிருந்தார் அதற்கு பிரதமர் இந்த தொகை பெரும் உதவியாக இருக்கும் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிலையில்

கடலூர் : லால்பேட்டையில் முகம்மது பயாஸ் என்பவர் கொரோனா பாதிப்பு ஊரடங்கினால் உணவுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு நிதி திரட்டி உணவும், பொருட்களும் வாங்கி கொடுத்து மனிதநேய பணிகளை செய்து வருகிறார்,

மேலும் தன் முகநூலில் கூறியிருந்தார், என் வீட்டை தேடி தன் தந்தையோடு வந்த ஹாஜா பாவா பேக்கரி உரிமையாளர் அமீர் பாஷா மகள் ஆஃபிக்கா தான் உண்டியலில் சேகரித்து வைத்திருந்த 3018 ரூபாய் சில்லறை காசை என்னிடம் கொடுத்து.. ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வாங்க பயன்படுத்துங்கள் என கூறிவிட்டு சென்றார்..
என்று தன் முகநூலில் தெரிவித்திருந்தார்..!

அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் பரக்கத் செய்வானாக என்றும் கூறியிருந்தார் முகம்மது பயாஸ்

மேலும் இந்த சிறு வயதில் மனிதநேய பணிகளை செய்ய முன்வந்து உண்டியல் பணம் கொடுத்து உணவுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறிய சிறுமி ஆஃபிக்காவை முகநூலில் 500க்கும் மேற்பட்டோர் பாராட்டி வருகின்றனர் , இந்தியா 7 நியூஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்

Show More
Back to top button