கொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், “கடன்களை ஒத்திவைத்தல் உள்ளிட்ட துறை வாரியான நிவாரண நடவடிக்கை வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


தடுப்பு நடவடிக்கைகளுக்கு சோதனைகள் முக்கியமாகும். 130 கோடி தேசத்தில், இதுவரை 15,701 மாதிரிகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. போதுமான நேரம், ஆரம்ப எச்சரிக்கைகள் மற்றும் பிற நாடுகளின் படிப்பினைகள் இருந்தபோதிலும், நாம் நம்முடைய பொது மற்றும் தனியார்த்துறை திறன்களை பயன்படுத்தவில்லை, இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைத்து வழக்குகளையும் கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களை கண்காணிக்க வேண்டும்” என்று சோனியா காந்தி அறிக்கை தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் 350ஐ தாண்டியுள்ளன. சிலர் இறந்தும் உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 47 பேர் வெளிநாட்டினர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தேவையான வரிச்சலுகைகள், வட்டி குறைப்பு மற்றும் கடன்களை ஒத்திவைத்தல் உள்ளிட்ட ஒரு விரிவான துறை வாரியான நிவாரண நடவடிக்கையை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும். சம்பளம் பெறும் வர்க்கத்திற்கு, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் ஈ.எம்.ஐ.க்களை ஒத்திவைப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


சுற்றுலா மற்றும் சில்லறை விற்பனை போன்ற பிற துறைகளும் முடங்கியதால் பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அறிக்கையில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Show More
Back to top button