CoronaVirusசர்வதேச செய்திகள்

தாத்தாவிடம் மகிழ்ச்சியான செய்தியை ஜன்னல் வழியாக தெரிவித்த பேத்தி! கரோனாவால் கண்கலங்க வைத்த பாசம்!

தாத்தாவை காண வந்த பேத்தி
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை தாத்தாவிடம் காட்ட அவர் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்திற்கு சென்றுள்ளார் கார்லி. ஆனால் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வயதானவர்கள் தங்கி இருக்கும் அந்த இல்லத்தில் உள்ள யாரையும் வெளிநபர்கள் சந்திக்கக் கூடாது என்ற தடை இருப்பதால் கார்லி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் தனது காதலன் தனக்கு மோதிரம் அணிவித்து பிரபோஸ் செய்ததையும், அதை தான் ஏற்றுக்கொண்டதையும் மகிழ்ச்சியுடன் தனது தாத்தாவிற்கு சொல்ல வந்துள்ளார்.



அன்பிற்கு நடுவே வந்த ஜன்னல்
அதன்பின் அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு ஒரு யோசனை வழங்கியுள்ளனர். அதன்படி கார்லி அவரது தாத்தா தங்கி இருந்த அறையின் பின்பக்கம் சென்று அங்கிருந்த ஜன்னல் வழியாக தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கார்லியின் தாத்தா பேத்தியின் கையை ஜன்னல் கண்ணாடி மேல் கை வைத்து பார்த்துள்ளார். அப்போது கார்லியின் முகம் மிகவும் வாடிப்போயுள்ளது.


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தன் வாழ்கையின் முக்கிய தருணத்தைப் பற்றி தாத்தாவை கட்டி அணைத்து மகிழ்ச்சியாக சொல்ல முடியாதது வருத்தமளிப்பதாக கார்லி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button