பாஜக தலைவர் ஜேபி நட்டா கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒரு மாதத்திற்கு நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்

பாஜக தலைவர் ஜேபிநட்டா கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒரு மாதத்திற்கு நடைபெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொது நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனாவசியமான பயணங்களை தவிர்த்து விடவேண்டும் என்றும் பல்வேறு அறிவுரைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ ஒரு மாதத்திற்கு நடத்துவதில்லை என்று பாஜக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி வைரஸ் காரணமாக தர்ணா, ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவும் நடக்கக்கூடாது. என்று கூறினார்.

அதனடிப்படையில் பாஜக எந்த ஒரு போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. என்று ஜேபி நட்ட அவருடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Show More
Back to top button