திருவாரூரில் NPRக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்தில் மனிதநேய பணி
திருவாரூரில் போராட்டத்தில் மனிதநேய பணி…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது
இப்போராட்டத்தில் பிரபு என்பவரின் உறவினர்களுக்கு இரத்தம் வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத்க்கு அழைப்பு வந்தது.
அவர்கள் அந்த போராட்டக்களத்தில் உள்ள நபர்களிடம் இரத்தம் வேண்டும் என அறிவிப்பு செய்தார்கள். அங்கே போராட்ட களத்தில் (அபிவையை சார்ந்த SDPI ) தொண்டர் ராசிக் அஹமது முன்வந்து இரத்த தானம் செய்தார்.
கண்டன உறையாற்றிய மாநில செயலாளர் கோவை அப்பாஸ் அவர்கள் கூறினார்கள் மனிதநேய பணிகளில் இஸ்லாமியர்கள் இறைவனிடம் நன்மையை எதிர்பார்த்து செய்து வருகிறோம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம் எங்களை பார்த்து தீவிரவாதி என்று சொல்கிறாயே பாஜக அரசே என்று கண்டனத்தை தெரிவித்திருந்தார் ,
சொல்லி முடித்ததுமே மனிதநேய பணிகளில் இறங்கியதும் அங்கே இருந்த பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும், யார் மனிதநேயத்தை விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொண்டனர் என்பதை தெரிவித்து வருகின்றனர்