NPRக்கு எதிராக தமிழகம் முழுவதும் 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது..!

Advertisement

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்கள் பெண்கள் சிறுவர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் மாநில பேச்சாளர்கள் உறையாற்றினார்கள். அவர்கள் பேசும்போது,
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப் படுவார்கள். என்பதால் இதை ஆதரித்தவர்கள் கூட இதற்கெதிராக குரல் கொடுத்தும், சட்டப் பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதிமுக குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, மேற்குவங்கம், மத்திய பிரதேசம்,தெலுங்கானா,கேரளா, ஆந்திர, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட பல பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்..! அதுபோல் தமிழக மக்களின் உரிமையை காக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 80 நாட்களை கடந்து தமிழகத்தில் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 36 இடங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு CAA,NRC,NPRக்கு எதிராகவும், கண்டனத்தை தெரிவித்தனர்

மேலும் இறுதியாக இந்த அரசை வலியுறுத்தியது , இந்த கருப்பு சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் வரலாறு காணாத போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளதுள்ளனர்

எங்கள் போராட்டம் ஓயாது எங்கள் போராட்டக் களமும் மாறும் என்று தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்

Show More
Back to top button