பைக்கை எரித்து பலே நாடகம், பதவிக்காக சொந்த வாகனத்தை எரித்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கைது

திருச்சி மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் கட்டட ஒப்பந்தரராக பணி செய்து வருகிறார். மேலும் இவர் இந்து முன்னணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்

Advertisement


இந்நிலையில் தனது வீட்டில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை முன்புறம் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களைக்கொண்டு தாக்கி உடைக்கும் சப்தம் கேட்டதும் எழுந்திருக்கிறார்.

அப்போது அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாகவும் பைக் கை முற்றிலும் எரிந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்..!


ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட விரோதமா அல்லது தொழில், அமைப்பு சார்ந்த பகையா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்..!


விசாரணை மேற்கொண்ட காவல்துறை: சக்திவேல், தான் உள்ள இந்து முன்னணி அமைப்பில் மேற்பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக வாகனத்தை எரித்து நாடகமாடியுள்ளளார் என்பதை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்

இதில் எந்த அமைப்பு சார்ந்த விரோதமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல் சம்பவம் தொடர்கதையாகவே இருக்கிறது இது மற்றுமொரு சம்பவமும் இந்துத்துவா அமைப்புகளில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Show More
Back to top button