கோவை பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – வி.எச்.பி மற்றும் பாஜகவில் பயங்கரவாதிகள் இருவர் கைது
கோயம்பத்தூர் கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், வி.எச்.பி மற்றும் பாஜக பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கணபதி ரூட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பகுதியில் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ம் தேதி இரவு ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசினர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.
சம்பவத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த ஆனந்த்தன் என்பவர் தாக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அகில், பாண்டி என்ற இருவர் சரவணம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அகில் விஷ்வ இந்து பரிசித் அமைப்பிலும், பாண்டி பாஜக உறுப்பினராகவும் உள்ளனர்.
இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்டதுக்கு எதிர்வினையாக அவர்கள், பள்ளி வாசல் மீது பெட்ரோல் குண்டு வீசி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.