அஸ்ஸாமில் NRC நிராகரிப்பு சீட்டு: மக்களை தடுப்பு முகாமில் அடைக்க பாஜக அரசு தீவிரம்

அஸ்ஸாம் மாநிலத்தின், இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கடந்த 2019 ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 3 கோடியே 30 லட்சம் 27 ஆயிரத்து 661 பேர் வசித்து வந்த  நிலையில், என்ஆர்சி இறுதி பட்டியலில்,3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன.

Advertisement


இந்நிலையில், 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் என்ஆர்சி இறுதி பட்டியலிருந்து நீக்கப்பட்டது. இந்து மதத்தவர்களான 13 லட்சம் பேரும், இஸ்லாமியர்கள் 6 லட்சம் பேரும் ன்ஆர்சி இறுதி பட்டியலிருந்து நீக்கப்பட்டனர்.


நீக்கப்பட்ட 19 லட்ச பேரும் சட்டவிரோத குடியேறிகள் என்று மத்திய அரசால் அடையாளப்படுத்தப்பட்டது. இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிராகரிப்பு சீட்டுகளுடன் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று 120 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.


இதனையடுத்து, ‘நிராகரிப்பு சீட்டு’ வழங்குவதில் அஸ்ஸாம் மாநில பாஜக அரசு தாமதம் செய்ததது. இந்த நிராகரிப்புச் சீட்டுக்கள் மூலம்தான், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தீர்ப்பாயங்களிலும், நீதிமன்றங்களிலும் மேல்முறையிட செய்ய இயலும்.


குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மார்ச் 20 முதல் ‘நிராகரிப்பு சீட்டு’ வழங்க என்.ஆர்.சி. ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அஸ்ஸாம் அரசு தெரி வித்துள்ளது.


மார்ச் 20 முதல் நிராகரிப்பு சீட்டை வெளியிட திட்டம் உள்ளது என்று பாஜக அமைச்சர் சந்திர மோஎகன் படோவரி கூறியுள்ளார். “என்.ஆர்.சி. புதுப்பித்தல் பணிகளுக்காக மொத்தம் ரூ. ஆயிரத்து 348 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

நிராகரிப்பு சீட்டை பெற்ற பின், சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் “1971 மார்ச் 24 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அஸ்ஸாமிற்கு வந்துவிட்டோம்” என்பதை வெளிநாட்டி னர் தீர்ப்பாயங்களிலும் உயர் நீதி மன்றங்களிலும் நிரூபித்தாக வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்க முடியாதவர்கள், கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் இந்திய குடிமகனுக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்பு மையமான வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Show More
Back to top button