டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித் அக்தர் மீது பிகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித் அக்தர் மீது பிகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறை குறித்து கவிஞர் ஜாவித் அக்தார் கேள்வி எழுப்பினார். அதில், “இந்த வன்முறை சமவத்தால் பல அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பலர் இருப்பதற்கும், வெறுப்பூட்டும் வகையில் பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இருந்தும், கலவரத்திற்கு முக்கிய காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை” இவ்வாறு ஜாவித் அக்தர் கேள்வி எழிப்பினார்.
ஜாவித் அக்தார் இவ்வாறு கருத்து தெரிவித்ததற்கு எதிராக பிகாரில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் பிகார் போலீசார் கவிஞர் ஜாவித் அக்தர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.