குடியுரிமையை நிரூபிக்குமாறு ஐதராபாத்தை சேர்ந்த 3 பேருக்கு நோட்டீஸ்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை அசாமில் மட்டுமே என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்போதே பிற மாநிலங்களிலும் குடியுரிமை பிரச்சனைகள் எழத்தொடங்கி இருக்கின்றன.

அந்த வகையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு ஆதார் பணிகளை வழங்கும் UIDAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் “நீங்கள் இந்திய குடிமகன் இல்லை என எங்களுக்கு புகார் வந்துள்ளது. எனவே நீங்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2016 ஆதார் சட்ட விதிகளின் படி உங்களின் ஆதார் எண்ணை செயலிழக்க செய்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisementஇது குறித்து இம்மூவருக்காக வாதாடும் வழக்கறிஞர் முசாபருல்லா கான் தெரிவிக்கையில், “ஆதார் என்பது குடிமக்களுக்கான சான்று இல்லை. அது ஒரு இருப்பிடச்சான்று தான். 3 பேரும் கல்வியறிவு இல்லாத ஏழைகள். 2017, 2018-ம் ஆண்டுகளில் ஆதார் அட்டை பெற்றுள்ளார்கள். இந்திய குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களை காட்டுவது எனத்தெரியாமல் குழம்பிப்போய் உள்ளார்கள் எனத்தெரிவித்து உள்ளார்.

ஆங்கிலச்செய்தி: Scroll.in

தமிழில்: நியூசு ஆசிரியர் குழு

Show More
Back to top button