CAA & NRCஇந்தியாதமிழ்நாடு

CAA எதிர்ப்பு: திரும்பி பார்க்க வைக்கும் முத்துப்பேட்டை இளைஞர்கள் போராட்டம்!

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியிலும் அசாமில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில் அதற்கு இணையாக தமிழக போராட்டக்களம், வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து சூடுபிடித்துள்ளது.

டெல்லி ஷாஹின் பாக் போல் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஒரே ஒரு போராட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த போய், தற்போது தமிழகமெங்கும் ஷாஜின் பாக் தொடர்போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4-வது நாளாக ஷாஹின் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டதை போல் செயற்கையாக சிறை செய்து உள்ளிருந்து போராடுகிறார்கள்.



இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் பலரது கவனத்தையும் கவர்ந்து உள்ளது.

Related Articles

Back to top button