இந்தியாடெல்லி

டெல்லியில் வெற்றிபெற்ற ஆம்.ஆத்.மி எம்.எல்.ஏ வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி கைது

நடந்து முடிந்த டெல்லி பேரவை தேர்தலில் ஆளும் ஆம்.ஆத்.மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 தொகுதியை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

ஆனால் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக கட்சி வெறும் 8 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது.


இந்த நிலையில் மெஹ்ரௌலி தொகுதியில் வெற்றிபெற்ற ஆம்.ஆத்.மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அவருடன் இருந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.


வெற்றிபெற்ற நரேஷ் யாதவின் காரை குறிவைத்து சுடப்பட்டதில் அஷோக் மான் என்ற தொண்டர் உயிரிழந்தார். மேலும் ஹரேந்தர் எனும் மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அரசியல் பின்னணி இல்லை எனவும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.


டெல்லி ஷாஹின் பாகில் CAAக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி ஒருவர் துப்பக்கிச்சூடு நடத்தினான். அதன் பிறகு மற்றோரு தீவிரவாதியும் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

துப்பாக்கிச்சூட்டின்போது வேடிக்கைப்பார்த்த டெல்லி காவல்துறை, தற்போது ஆம்.ஆத்.மி கட்சி எம்.எல்.ஏ கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அரசியல் பின்னணி இல்லை என தெரிவித்துள்ளது.


டெல்லி தேர்தலில் படுதோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத பாஜக அரசு, திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Related Articles

Back to top button