வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஃபரூக் அப்துல்லா எப்போது மக்களவைக்கு வருவார்? கேள்வி எழுப்பிய எம்.பி. கண்டுகொள்ளாத சபாநாயகர்!

Advertisement

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் காரணமாக பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்து சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா இன்னும் விடுவிக்கப்படவில்லை.
”ஃபரூக் அப்துல்லா எப்போது மக்களவைக்கு வருவார்?” என மக்களவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 11ஆம் தேதி வரை ஒரு கட்டமாகவும், இக்கூட்டத்தொடரின் 2-வது கட்டம், மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபரூக் அப்துல்லா
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் காரணமாக பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்து சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா இன்னும் விடுவிக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார் என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார்.


சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்
நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், “எனது நண்பர் பரூக் அப்துல்லா வழக்கமாக எனது அருகில் அமர்ந்திருப்பார். அவர் எப்போது மக்களவைக்கு வருவார் ?” என்று கேட்டார். ஆனால், இந்த கேள்வியை சபாநாயகர் ஓம் பிர்லா அலட்சியப்படுத்தி, அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார். சபாநாயகர் நடந்துகொண்ட முறை அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஃபரூக் அப்துல்லாவை சென்னையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என வைகோ அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியும், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார். இது சட்டப்படி உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல் எனவும், கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும் ,வைகோ தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Show More
Back to top button