காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் 24 வயது கல்லூரி பேராசிரியையை இளைஞர் எரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisementமகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரில் தாவரவியல் முதுகலை படித்துவிட்டு, பேராசியையாக பணியாற்றிவந்தார் அங்கிட்டா. கடந்த திங்கள் காலை 7.30 மணிக்கு வழக்கம்போல் பேருந்தில் சென்ற அங்கிட்டா கல்லூரி வாசலில் உள்ள பேருந்து நிலையத்தில் வந்திறங்கியபோது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பேராசியை மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள், சில நொடிகளில், பேராசிரியை அங்கிட்டாவை தீவைத்து கொழுத்திவிட்டு அந்த இளைஞர் பைக்கில் தப்பியுள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அங்கிட்டாவை அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்த்துள்ளனர். பெட்ரோல் ஊற்றி கொழுத்தியதில், அங்கிட்டாவின் முகம், கை, கழுத்துப்பகுதி முழுவதும் கருகியதாக மருத்துவர்கள் தெரிவித்தார்

40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அன்கிட்டா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தையடுத்து, கொலை வழக்காக மாற்றிய போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அன்கிட்டாவை தீவைத்து எரித்துக்கொன்றது, அவரது வீட்டின் அருகே வசித்துவரும் 27 வயதான விக்கி என்பது தெரியவந்தது.

ஒரே பேருந்தில் கடந்த 3 மாதங்களாக பயணம் செய்தபோது, காதலிப்பதாக அங்கிட்டாவை விக்கி விரட்டிவந்துள்ளார். அங்கிட்டா கல்லூரிக்கு செல்லும்போது பின் தொடர்ந்து விக்கி தொல்லை கொடுத்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வெறுத்துப்போன அங்கிட்டா, என்னை பின் தொடராதே என விக்கியை பலமுறை எச்சரித்துள்ளார்.

விக்கி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு 7 மாத குழந்தை இருப்பதையும் அறிந்த அங்கிட்டா விக்கியை புறக்கணிக்கத்தொடங்கியுள்ளார். இதனால், அத்திரமடைந்த விக்கி, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அங்கிட்டாவை பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி அங்கிட்டாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து, சிரமங்களுக்கு மத்தியில் படித்து எதிர்கால கனவுகளுடன் பேராசியையான அங்கிட்டாவின் வாழ்க்கையை காதல் பிரச்னை எரித்துள்ளது. பேராசிரியை பேருந்து நிலையத்திற்கு அருகில் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Show More
Back to top button