CAA’வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம், ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஊரில் நெகிழ்ச்சி சம்பவம்

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம். 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை.

நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

Advertisement

இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேட்டுக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி நாட்டிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது இஸ்லாக் கிராமம்.

Show More
Back to top button