24 நாட்கள் அரையில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட இளம்பெண்
17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை 32 வயது நபர் ஒருவர், ஒரே அறையில் 24 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜால்னா என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் தேஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியே சென்ற அவர், வீட்டிற்கு திரும்பவில்லை. பல மணி நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து, இளம்பெண்ணை தேடும் பணியில் இறங்கிய போலீசார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையின் முடிவில் அவர் அடைத்து வைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்தனர். அங்கு சென்ற போலீசார், தேஜாவை மீட்டு அவரிடம் விசாரித்தனர்.
அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவரது மாமாதான் அவரை கடத்தியதாகவும் 24 நாட்கள் ஒரே அறையில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தேஜா கண்ணீர் மல்க தெரிவித்தார். அதனை அடுத்து, தேஜாவை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் வருவதை அறிந்த தேஜாவின் மாமா அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.