பொதுவான செய்திகள்

8ம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி வாகன ஓட்டுநர் , சுடுகாட்டில் பலாத்காரம் செய்ய முயன்ற போது அலரல் சத்தத்தில் பொதுமக்கள் வந்து தர்மஅடி

ஆந்திரா : ஆந்திர மாநிலம் அமராவதி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பள்ளி பேருந்து ஓட்டுநர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமராவதி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயங்கும் பேருந்து ஓட்டுநராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், வழக்கம் போல பேள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, 8-ம் வகுப்பு மாணவி தனியாக நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளார். அப்போது, அவரை வலுக்கட்டாயமாக, அருகே உள்ள சுடுகாட்டிற்கு கடத்தி சென்றுள்ளார்.


அந்தப் பகுதியில் இருந்த முட்புதரில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ஓட்டுநர் சிவா. அப்போது, சிறுமி பயங்கரமாக அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

பிறகுதான் பொதுமக்கள் தங்களின் கச்சேரியை ஆரம்பித்தனர்.
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஓட்டுநர் சிவாவை ஆடையைக் கழற்றி அரைநிர்வணமாக்கி பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், சாலையில் அரைநிர்வாணமாகவே இழுத்து வந்தனர்.
இதனிடையே, பொதுமக்கள் சிவா ஓட்டி வந்த பள்ளி வேனையும் தீயிட்டு கொளுத்தினர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வேன் ஓட்டுநர் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Articles

Back to top button