இந்தியா

பசுக்களை கொன்று தின்னும் புலிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் – கோவா எம்.எல்.ஏ பேச்சு

பசுக்களை கொன்று உணவாக சாப்பிட்டால் புலிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோவா சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ
கோவாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் புலிகள் அருகேயுள்ள கிராமங்களில் இருக்கும் பசுக்களை கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கோவா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத் இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற போது, பசுக்களை கொன்று உண்ணும் மனிதனுக்கு தண்டனை வழக்கப்படுவது போல புலிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ கேள்வி எழுப்பினார்.

கோவாவில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button