CAA & NRCஇந்தியாபாஜக - BJP

மகாராஷ்டிராவில் NRC-யை அனுமதிக்கலாம் முடியாது : உத்தவ் தாக்ரே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, மாநிலத்தில் என்ஆர்சி-யை அனுமதிக்க முடியாது என மறுபடியும் உறுதிபடக் கூறியுள்ளார்.


இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்ஆர்சி-யை தங்களின் மாநிலத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரவளிக்கும் மகாராஷ்டிர முதல்வர்,  இது யாரிடமிருந்தும் குடியுரிமை உரிமைகளை பறிப்பதைப் பற்றியது அல்ல; அது அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆனதாகும் என விளக்கம் அளித்தார்.


இது தொடர்பாக ‘சாமனா’விற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்ஆர்சி குறித்த கேள்விக்கு ‘குடியுரிமையை நிரூபிப்பது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடினமாக இருக்கும். ஆகவே நான் அதை நடக்க விடமாட்டேன்” என்று பேசியுள்ளார்.


மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான பல இடங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், உத்தவ் தாக்ரேவும் மகாராஷ்டிராவில் என்ஆர்சியை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருப்பதை பெரிய பின்னடைவாக அரசியல் விமர்சகர்கள் கருகின்றனர்.
(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

Related Articles

Back to top button